பா.ஜ.க. உட்பட மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி,இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், அகில இந்திய மாணவர் அமைப்பு, பிம்எஸ் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக ஹிந்துகுழந்தை லாவண்யாவுக்கு நிதி வேண்டி பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நேதாஜி சிலை வரை அமைதி ஊர்வலம் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் பா சரவணன் முன்னாள் எம்.எல்.ஏ. . தலைமையில் நடைபெற்றது…இதில், பாஜக நிர்வாகிகள் பெருந்திரளாக ஊர்வலமாக வந்தனர்..மேலும், நேதாஜி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… இதில், பல்வேறு இந்து அமைப்பு தலைவர்கள் லாவண்யா மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பள்ளி நிர்வாகத்தையும் மதமாற்றத்தை கண்டித்து லாவண்யா புதைக்கப்பட வில்லை விதைக்கப்பட்டு உள்ளார்கள். ஹிந்துக்கள் விழிப்புணர்வு செயல்பட வேண்டும் என்றும் பேசினார்கள்..பல்வேறு அமைப்பு தலைவர்கள் விசுவ இந்து பரிஷத் கே.எம்.பாண்டியன், பாஜக மாநில செயற்குழு சசிராமன், பாஜக மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கதலிநரசிங்க பெருமாள், மாநகர் புறநகர் மாவட்ட தலைவர்கள் மருத்துவர் பா.சரவணன், மகாசுசிந்திரன், பிஎம்ஸ் பொறுப்பாளர் தங்கராஜ் கண்டன சிறப்புரையாற்றினார்கள்..இந்து முன்னணி மாநிலச் செயலாளர் பரமசிவம், ஆலய பாதுகாப்பு சுந்தரவடிவேல், பல்வேறு இந்து அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!