விபத்தில் சிக்கிய சைக்கிள் ரிச்சாவை சரி செய்து உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டுமென ரிச்சாவை இல்லமாக வைத்து வாழ்ந்துவந்த கருப்புசாமி கோரிக்கை .

தமிழகத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் பயண போக்குவரத்திற்கு முக்கிய பங்காற்றியது ரிக்ஷாக்கள்.இதுபோன்ற மிதிவண்டி ரிக்ஷாக்கள் சிரமத்தை குறைக்க ரிக்ஷா களில் மோட்டார்கள் பொருத்தப்பட்டது.காலச்சக்கரத்தின் ஓட்டத்தில்ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் அதிகரித்ததன் காரணமாக ரிக்ஷாகளை மக்கள் மெல்ல மெல்ல மறக்க தொடங்கினர்.இதனால் அதனை நம்பி வாழ்வாதாரம் ஈட்டி வந்த பலரும் ரிக்ஷா ஓட்டும் தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறினர். இந்த நிலையில்மதுரை மாவட்டம் செக்கானூரணி சேர்ந்த கருப்பசாமி இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.நர்சிங் படித்த மகளை திருமணம் முடித்து கொடுத்த நிலையில் இவரது மகன் பட்டதாரியாக தனியார் நிறுவனத்தில் வேலைபர்த்து வந்த நிலையில் கடந்த மாதம் திருநெல்வேலியில் உறவினர்இல்ல நிகழ்ச்சிக்கு சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.செக்கானூரணியை சேர்ந்த 54 வயதான கருப்புசாமி சுமார் 40 வருடங்களாக மதுரை மேலமாசி வீதி பகுதியில் ரிக்க்ஷா ஓட்டியும் செருப்பு தைத்து தனது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றார்.

இந்த ரிக்ஷாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீடாக கருப்புசாமி பயன்படுத்தி வருகின்றார்.மழை , பனி , வெயில் என எந்த தட்பவெட்ப காலத்திற்கும் கருப்புசாமிக்கு இந்த ரிக்ஷாவே வீடாக இருந்து வருகின்றது.தனக்கு வருவாயை ஈட்டித் தந்த ரிக்ஷா கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட சிறு விபத்தில் ஒரு சக்கரம் முழுமையாக சேதம் அடைந்து முடங்கி கிடப்பதால் தன்னுடைய வாழ்வாதாரமும் முடங்கி கிடப்பதாக செருப்பு தைப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து அன்றாடம் உணவு உட்கொண்டு வருவதாக கருப்பசாமி தெரிவிக்கின்றார்.ஆட்டோ மற்றும் டாக்ஸி வருகை அதிகரித்ததால் தனது ரிக்சாவில் பொதுமக்கள் பயணம் செய்ய விருப்பம் தெரிவிப்பது இல்லை எனவும் கொரோனா நோய் பரவலுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மதுரைக்கு வந்தால் அவர்களை மதுரையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றால் போதிய வருவாய் கிடைத்து வந்த நிலையில் கொரோனாவிற்குப் பின்னர் வெளிநாட்டு பயணிகள் வருகை முற்றிலும் குறைந்ததால் ரிக்சா மூலம் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டதாகவும் , செருப்பு தைப்பது மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மூன்று நேரத்தில் ஒரு சில வேலை உணவுகளை மட்டும் உட்கொண்டு கருப்புசாமி ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வருகின்றார் .ஒருவேளை உணவுக்காக யாரிடமும் கையேந்த யோசிக்கும் கருப்புசாமி தனது இறுதி நாள் வரை எனது உழைப்பில் சம்பாதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலேயே சாப்பிட வேண்டும் என்ற உயரிய லட்சியம் கொண்டுள்ளார்.விபத்தில் சேதமடைந்த தனது ரிக்ஷாவை நல்லுள்ளம் படைத்த நபர்கள் சரி செய்து கொடுத்தால் உதவியாக இருக்குமென தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!