அவனியாபுரத்தில் அனுமதியின்றி சட்டத்திற்குப் புறம்பாக மரம் வெட்டியதால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்.

அவனியாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் உள்ள மரங்களை தனிநபர் வெட்டி வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் அனுமதி கடிதம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.அவர்களிடம் முறையான அனுமதி கடிதம் இல்லாமல்சட்டத்திற்குப் புறம்பாக மரங்களை வெட்டியது தெரியவந்தது இதுகுறித்து காவல்துறையினரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.இப்புகார் குறித்து எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் இப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!