அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் விழா.

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டி. கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய கழகச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். அரிசி, வெல்லம், கிஸ்மிஸ் பழம், தேங்காய், முழுக் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் வழங்கினார் .நகரச் செயலாளர் வினோத் குமார் வரவேற்றார்.இதில், அவைத் தலைவர் செல்வேந்திரன் ஒன்றியப் பொருளாளர் ராமசாமி, துணைச்செயலாளர் சங்கிலி, அம்மா பேரவை பரமசிவம், மாணவரணி சேதுராமன், தகவல் தொழில் நுட்ப அணி பழனி முருகன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் நிரஞ்சன், திருமங்கலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், பேரையூர் நகரச் செயலாளர் பாலமுருகன், இளைஞர் பாசறை முனீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!