மதுரை காமராஜர் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 600க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தினக்கூலி பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நேற்று முதல் இன்று 2வது நாளாக பல்கலைக்கழக வளாகத்தில் தினக்கூலி பணியாளர்கள், பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 245 தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக எஸ்சி எஸ்டி சங்க செயலாளர் பார்த்தசாரதில உட்பட பல்கலைக் கழக பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எமது கட்சி எம்எல்ஏக்கள் பேசுவார்கள், இதே போன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகலத்தில் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்கள் கோரிக்கை சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது.இதேபோன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்களின் கோரிக்கையை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசப்படும்.எனவே இது குறித்து தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!