மதுரையில் ட்ரெண்ட் ஆகி வரும் மஞ்சப்பை புரோட்டா; பொதுமக்கள் வரவேற்பு.

மதுரையை தற்போது மீண்டும் மஞ்சப்பை பரோட்டாக்கள் கலக்கி வருகின்றன. மஞ்சப்பை வடிவில் போடப்படும் பரோட்டாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. மஞ்சப்பை எப்படி இருக்குமோ அதே வடிவத்தில் பரோட்டாக்களை மாஸ்டர்கள் வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளன. அழிந்துவரும் மஞ்சப்பை பழக்கத்தை மீண்டும் கொண்டுவர முதல்வர் மீண்டும் மஞ்சப்பை என்கின்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார், அதனை வரவேற்கும் பொருட்டு மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள உணவகத்தின் புதிய முயற்சியாக மீண்டும் மஞ்சப்பை புரோட்டா மற்றும் பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கி ஊக்குவிக்கின்றனர்.மதுரையில் உள்ள சுப்பு அசைவ உணவகத்தை சகோதரர்கள் ஆன நவநீதன் (47), குணா (28) ஆகிகடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உணவகங்களில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு பார்சல் வாங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கியும் முகங்களை வழங்கியும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இதே போன்று மதுரையில் கடந்த ஆண்டில் மாஸ் வடிவிலான பரோட்டா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!