திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிள்ளையார் நத்தம் கண்மாய.குல்லல்க்குண்டுதெப்பக்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களின் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான குடி மராமத்து பணி சீரமைப்பு திட்டப்பணிகளை செய்யக்கூடிய சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது. இக் கண்மாய்களின் சங்க அமைப்புகளில் சங்க நிர்வாகிகள் தேர்வில் பல்வேறு குளறுபடி இருப்பதாக கூறி அப்பகுதி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் சாலை மறியல் போராட்டம் இக் கண்மாய்களின் விவசாயிகளுக்கு இடையே சமாதானக் கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி, நிலக்கோட்டை தாசில்தார் நவநீத கிருஷ்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நடத்தி வந்தனர்.
இந்த சமாதான கூட்டத்தில் பிள்ளையார் நத்தம் கண்மாய் நிர்வாகிகள் ஒருமனதாக சங்கத் தலைவராக ராஜாமணி, செயலாளராக நடராஜன், பொருளாளராக சதீஷ்குமார், மற்றும் துணைத் தலைவராக முனியாண்டி, துணைச் செயலாளராக கருத்த தேவர், ஆகியோர்களை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெப்பக்குளம் கண்மாய்க்கு சங்க நிர்வாகிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..அப்போது விவசாயிகளுக்கு இடையே எந்தவிதமான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உடனடியாக நேரடித் தேர்வு தேர்தல் நடத்தப்பட்டது. குலுக்குசீட்டு மூலமாக தெப்பக்குள சங்கத் தலைவராக ஜான் இன்னாசி , சங்க செயலாளராக மகாராஜன், சங்க பொருளாளராக தவமணி, சங்கத் துணைத் தலைவராக ஆசைத்தம்பி, துணைச் செயலாளராக ராயப்பன் தேர்வு செய்யப்பட்டனர்.இக்கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், லாவண்யா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணமுத்து, திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் ராகு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












