வாடிப்பட்டி அருகே3,650 கிலோ கஞ்சா கடத்திய 5 பேர் கைது, மோட்டார் சைக்கிள் பறிமுதல்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏடுகள் அசாருதீன், குடியரசன் ஆகியோர் வாகன சோதனைசெய்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தனிச்சியத்தை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் என்ற ஜெகன் (32) அழகுமலை(20), உசிலம்பட்டி இடையபட்டியை சேர்ந்தஆனந்தன் (32)ஆகியோர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடினார். உடனே அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது1.750 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரொக்கப் பணம் ரூ 5100 அவர்களி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணையில்  பாண்டியராஜன் ரயில்வே கேட் பகுதியில் அவர்களிடம் வாங்கி வந்ததாகஅவர் கொடுத்த தகவலின் பேரில் பாண்டியராஜபுரம் பகுதியில் பதுங்கியிருந்த கொண்டையம்பட்டி சேர்ந்த ஜோசப் மணிராஜ் (22), திண்டுக்கல் ஆத்தூர் முத்துராஜ் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து1,900 கிலோ கஞ்சாவையும் ரொக்கப்பணம் ரூபாய் 16, 170 ஆகியவற்றை மற்றும் அவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து செய்தனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!