ஊரடங்கு: மதுரையில் உணவகங்கள் மூடல், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவதி.

மதுரை:அரசு பிறபித்த ஊரடங்கு காரணமாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், மருந்தகம், பால் விற்பனை நிலையங்களை தவிர மற்ற வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைகப்பட்டிருந்தன.இதனால், மதுரையில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பலர் உணவுக்காக அலைய நேரிட்டதாம்.சில இடங்களில் போலீஸார் தடுப்புகளை சாலையில் வைத்து, இரு சக்கரவாகனத்தில் வருவோரை தீவிரமாக விசாரித்து அனுப்பினர்.வெளிமாநில லாரிகளை தவிர உள்ளூர் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.மதுரை- சிவகங்கை சாலையில் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆலயங்கள் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி தனூர் மாத பூஜை நடைபெற்றது.கொரானா பெரும் தொற்று காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால், சாலைகளான, பைபாஸ் சாலை, பெரியார் பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாநகர் முழுவதும் சைக்கிள் முதல் இருசக்கர வாகன வரை பொதுப் போக்குவரத்து மற்றும் அனைத்து வாகனங்களும் செல்லாமல், சாலைகள் வெறிச்சோடியது. மேலும், பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!