மதுரை மாநகராட்சியில், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம்: ஆணையாளர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா 19 தீவிர தடுப்பு பணியை முன்னிட்டும் அவசர அவசியம் கருதியும், கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோவிட் கவனிப்பு முகாம், கோவிட் காய்ச்சல் முகாம் மற்றும் கோவிட் பரிசோதனை முகாம்களில் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு மாதத்திற்கும் தேவைப்படின் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தும் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விருப்பமுள்ள கீழ்க்கண்ட தகுதியுடையவர்கள் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நகர்நல அலுவலரிடம் தங்களது விபரங்களை நேரடியாக முறையில் வந்து 08.01.2022 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வ.எண்:பணிகல்வித்தகுதிதேவையான நபர்கள்ஊதியம் மாதம் ஒன்றிற்கு1.அலோபதி மருத்துவர்கள்எம்.பி.பி.எஸ்.25ரூ.600002.ஆயுஷ் மருத்துவர்கள்பி.ஹெச்.எம்.எஸ். பி.எஸ்.எம்.எஸ். பி.ஏ.எம்.எஸ்.25ரூ.300003.ஆய்வக நுட்புனர்டி.எம்.எல்.டி. பி.எஸ்.சி. எம்.எல்.டி. 35ரூ.150004.செவிலியர்கள்பி.எஸ்.சி. நர்ஸிங் டிப்ளமோ நர்ஸிங்50ரூ.14000மேற்படி பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. பிற்காலத்தில் பணிநிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் கோர இயலாது என, மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!