கொரான காலத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் ஐய்யப்ப பக்தர்களுக்கு பயணத்தின்போது சில தளர்வுகள் அளிக்க வேண்டும். பக்தர்கள் வேண்டுகோள்.

தமிழகத்தில் கொரோனா தோற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக அரசு நேற்று முதல் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் இன்று முதல் அனைத்து திருக்கோயிலுக்குள் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஆன்மீகச் சுற்றுலாவாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.தற்போது வார இறுதியில் மூன்று நாட்களுக்கு திருக்கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ள காரணத்தால் பல ஊர்களிலிருந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் நடை அடைப்பால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறனர்.மேலும் திடீரென்று இரவு ஊரடங்கு அறிவித்துள்ள காரணத்தால் ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சில தளர்வுகள் வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.தாங்கள் இரவு நேரத்தில் பயணிப்பதற்கும், உணவு விடுதிகளில் அமர்ந்து உண்ணுவதற்கும் சில தளர்வுகள் வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!