மதுரையில் தமிழறிஞர்கள் சிலைகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை மலரஞ்சலி…

மதுரையில் 1981 ஜனவரி 5ம் தேதி உலகத் தமிழ் மாநாட்டின் போது பதினோரு தமிழறிஞர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்கப்பட்டது.அவர்களின் தமிழ்ச்சேவையை போற்றும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்படி மதுரை பாத்திமா கல்லூரி அருகில் வீரமாமுனிவர் மற்றும் ராபர்ட் நொபிலி, காலவாசலில் திரு.வி.க, பலங்காநத்ததில் நாவலர் சோமசுந்தர பாரதியார், மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் ஆறுமுக நாவலர், மேலமடையில் தனிநாயகம் அடிகளார், தல்லாகுளத்தில் உ.வே.சா மற்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராஜா முத்தையா மன்றம் அருகில் வேதநாயகம், கே.கே.கரில் தொல்காப்பியர், அண்ணா பேருந்து நிலையம் அருகில் திருவள்ளுவர் சிலை ஆகிய பதினொரு தமிழறிஞர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக சிறப்பாக சேவையாற்றிய இவர்களை பற்றி தமிழ் ஆர்வம் மிக்க மாணவ மாணவிகளும் பொதுமக்களும் அறிந்து கொள்ள வசதியாக இச்சிலைகளை மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் கிரேசியஸ், மாற்றம் தேடி பாலமுருகன் மற்றும் உதவும் உள்ளம் பெரியதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!