பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவீன் உள்ளிட்ட அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3.கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நேற்று கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விருதுநகர் மாவட்டம்குற்றப்பரிவு அலுவலகத்தில் வைத்து 3 மணி நேரத்திற்கு மேலாக விருதுநகர் சரக டிஐஜி காமினி மற்றும் விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் விசாரணை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்றம் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து ஜன.20 வரைநீதிமன்றம் காவலில் வைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறை அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். முன்னதாக மதுரை மத்திய சிறையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.தொடர்ந்து மத்திய சிறையின் முன்பு குவிந்த ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் ஆதரவு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!