வலிமை திரைப்படம் 13 ஆம் தேதி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்து தயாராக இருந்த ரசிகர் ஏமாற்றம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி நடிகர் அஜித் குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.அந்தவகையில் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் வலிமை திரைப்படம் 13 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து, திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் பட ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு காரணமாக பல்வேறு வகையில் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!