கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதியில் விவசாயிகளுக்கு முறையாகப் பணம் பட்டுவாடா வழங்காததை கண்டித்து சோழவந்தானில் உள்ள வாடிப்பட்டி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கருப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் நெல் அறுவடை செய்து நெல் செய்யப்பட்டது இதற்கு . முறையாகப் பணம் வழங்கக்கோரி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கிருந்து அதிகாரியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர் பின்னர் கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த சோழவந்தான் போலீசார் அதிகாரிகளிடம் மற்றும் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் விவசாயிகள் கூறும்போது அதிக அளவில் கடன் வாங்கி பல்வேறு மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை கடந்து தற்போது நெல் அறுவடை செய்து அதனை வியாபாரிகளுக்கு வழங்காமல் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தோம் அதற்கு தரவேண்டிய பணத்தை முறையாக தராமல் காலம் தாழ்த்தியும் தற்போது குறைவான பணமும் வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!