பத்திரம் நகல் எழுத்தர்களுக்கு எழுத்து கூலி 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பில் அமைச்சர் கோரிக்கை.

தமிழகத்தில் உள்ள பத்திரம் நகல் எழுத்தர்களுக்காக தமிழக அரசு நேற்று பத்திரம் எழுதுவோர் நல நிதியம் அமைத்து அரசாணை வெளியிட்டது, இதனையடுத்து தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் மதுரையில் வணிக மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை நேரில் சந்தித்து பத்திரம் எழுதுவோர் நல நிதியம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தமைக்காக நன்றி தெரிவித்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் பத்மநாபன் கூறுகையில் “2007 ஆம் ஆண்டு பத்திரம் எழுதுவோர் நல நிதியம் அமைக்க அறிவிக்கப்பட்டது, 15 ஆண்டுகளாக நல நிதியம் அமைக்கவில்லை, நல நிதியகம் அமைக்க கோரிக்கை விடுத்தோம், முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திர எழுத்தர் நல நிதியம் அமைத்து உத்தரவு பிறப்பித்தார், 15 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர், அமைச்சர், அதிகாரிகளுக்கு நன்றி , எழுத்தர் நல நிதியத்தினால் 5,158 எடுத்தார்கள் பயன் அடைவார்கள், 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆவண எழுத்தருக்கான தேர்வை நடத்த வேண்டும், குறைந்தபட்ச எழுத்து கூலி 500 ரூபாயாகவும், அதிகபட்ச எழுத்து கூலி 7,500 ரூபாயாகவும் வழங்க வேண்டும்” என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!