வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.தொல்காப்பியன், தேர்தல் அலுவலர் கோபாலரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொருளாளர் இ.ஜோதிராமலிங்கம், துணைத்தலைவர் எம்.மாயன், மாவட்ட தலைவர் கே.விஜயகுமார் பொருளாளர் ஏ.மணி, மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயராமன், முத்துச்சாமி, மாவட்ட கெளரவத் தலைவர் தாண்டவ மூர்த்தி, பொன்.வெங்கடேசன், பிரச்சார செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.7-வது ஊதியக்குழு நிலுவை தொகை, வருங்கால வைப்புதொகை முன்புபோல் பிடித்தம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியதிட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பேரூராட்சி, தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மாநில நிர்வாகிகள் வரும் ஜனவரியில் தமிழக முதல்வர், உள்ளாட்சி அமைச்சர்களை சந்திப்பது, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகங்கள் மற்றும் அதற்கான பதவிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!