ரயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு:விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் ஆலோசனை.

 மதுரை மாவட்டம் சோழவந்தானில், வாடிப்பட்டி பிரதான சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலத்தின் அடியில் பேரூராட்சி சார்பாக குடிநீர் குழாய் பதித்தல் அணுகுசாலை பணிகள் உள்ளிட்டவற்றை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, பால வேலைகளை விரைவாக முடிக்க கோரி அதிகாரிகளிடம் போனில் பேசினார். கடந்த சில நாட்களாக மழை காரணமாகவும் மணல், ஜல்லி தட்டுப்பாடு காரணமாகவும் பணிகள் தாமதமாக நடைபெற்றதாகவும் தற்போது, அரசின் அனுமதி பெற்று குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளதால், விரைவில் துரிதமாக பணிகள் நடைபெற்று பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இது சம்பந்தமாக அடிக்கடி வந்து நேரில் வந்து பார்வையிட்டு பாலம் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னை அணுகி வேலையை விரைந்து முடிக்க என்ன நடவடிக்கை வேண்டுமோ அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், திமுக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பசும்பொன் மாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் செயலாளர் முனியாண்டி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் இளைஞரணி வெற்றிச்செல்வன், முன்னாள் சேர்மன் ஐயப்பன், பேட்டை பெரியசாமி எஸ்.ஆர். சரவணன், கௌதம ராஜா, எஸ் எம் பாண்டியன் சங்கோட்டை சந்திரன் ஆட்டோ மார்நாடு மாரிமுத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பிஆர்சி பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!