மணிகண்டன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் காவல்துறை சித்திரவதை படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாணவர் மணிகண்டன் வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க கோரிக்கை.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீர்க்கோழி ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன் கடந்த 4ம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்.இதனை அடுத்து வீடு திரும்பிய மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவரின் பெற்றோர் மற்றும் சமூக நல அமைப்புகள் மாணவரின் சாவுக்கு காரணமான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர் ..இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மணிகண்டனின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனை நடைபெற்றது.இதுகுறித்து காவல்துறை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மாணவர் மரணம் தற்கொலை என விளக்கமளித்தார்.இதனைத் தொடர்ந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிரான கோஷங்களை முழக்கமிட்டனர்.முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்.மாணவர் மணிகண்டனின் தற்கொலைக்கு தூண்டுதல் ஆனவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் போராட்டம் நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!