அரசப்பட்டியில் பயிருக்கு அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி கணவன் உயிரிழப்பு –

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசம்பட்டி பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெல்மணிகளை பாதுகாக்க., காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் – அங்கம்மாள் தம்பதியினர்., அதிகாலை விவசாய பணிக்கு சென்று வீடு திரும்பும் பொழுது மின்வெளி தாக்கி சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்தார். காப்பாற்ற சென்ற மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசப்பட்டி கிராமத்தில் விவசாயி கிருஷ்ணன்-அங்கம்மாள் தம்பதியினர் தோட்டத்தில் இருந்த பருத்தி எடுக்க சென்றும், அவரது கால்நடைகளுக்கு புல் அறுத்து விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில்., கதிர்வேல் என்பவரது 3 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.மேலும்., இப்பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகம் இருப்பதால் விவசாய பயிர்களை பாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற சுற்றியும் மின்வேலி அமைத்துள்ளார். தற்போது., விவசாய நிலம் முழுவதும் தொடர்ச்சியாக பெய்த கனமழை மற்றும் கண்மாய்கள் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரினால் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மிதந்து காணப்படுகிறது.இதனால் விவசாய நிலங்கள் முழுவதும் மின்வேலியில் தண்ணீரில் இருந்ததால் எதிர்பாராதவிதமாக வயல் வரப்பில் நடந்து சென்ற கிருஷ்ணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண்முன்னே கணவன் துடிதுடிக்க இறப்பதை கண்டு காப்பாற்ற முயன்றபோது அவரும் தூக்கி வீசப்பட்டார்.உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கம்மாளை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் கிருஷ்ணன் உயிரிழந்ததால் கள்ளிக்குடி போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும்., மாணவி அங்கம்மாளை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய நிலத்தில் பயிர்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!