லஞ்சம் பெற்ற அரசு மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம்.

 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் மாவுகட்டு போடுவதற்காக வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது இந்த நிலையில் மாவுக்கட்டு போடும் பணியில் உள்ள மருத்துவ பணியாளர் கணேசன் என்பவர் மாவுகட்டு வரும் நோயாளிகளிடம் 100 முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில் நோயாளி ஒருவர் இவர் லஞ்சம் பெறும் போது ரகசியமாக படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை டீன் ரத்தனவேல் இதுகுறித்து விசாரணை நடத்தினார் விசாரணை நடத்தியதில் அவர் லஞ்சம் பெற்றது உறுதியானால் அவர் மீது ஏற்கனவே அதிக அளவு பலமுறை லஞ்சப் புகாரில் சிக்கி உள்ளதாக தெரியவந்தது இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவமனை டீன் ரத்தினவேல் இவரை பணி இடைநீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!