மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு அஞ்சலி.

இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் அவரது மனைவி உள்பட 13 வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த ஜெனரல் பிபின் ராவத் அவர்களுக்கு காந்தி மியூசியம்,மற்றும் பாரதி யுவகேந்திரா அறக்கட்டளை சார்பாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஜவகர் பாபு தலைமையில் செயலாளர் நந்தாராவ், சமூக ஆர்வலரும், பாரதி யுவகேந்திரா நிறுவனருமான நெல்லை பாலு, ரோட்டரி கிளப் ஈஷா கரீம் ஆகியோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!