இராஜபாளையத்தில் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தோப்புபட்டி தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார் வயது 67 இவரது மனைவி ராக்கம்மாள் வயது 63 இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர் குழந்தைகள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிள்ளையாரும் ராக்கம்மாள் இருவம் தனியாக சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் ராக்கம்மாள் தலையில் மற்றும் தோள்பட்டையில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் .வயதான காலத்தில் வீடு மேற்கூரை இடிந்து விழுந்து தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!