16.10.19ம் தேதி திருமங்கலம் அருகில் சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்கள் தவறவிட்ட பணப்பையை திருமங்கலம் தாலுகா, கிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தியும் அவரது
மனைவி பாண்டியம்மாளும் கீழே கிடந்து எடுத்து அதிலிருந்த 6 பவுண் தங்க செயின் மற்றும் ரூ.500/-ஐ உரிய நபரிடம் ஒப்படைக்க திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையையும், கடமை உணர்வையும் பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழும், பண வெகுமதியும் வழங்கி கௌவுரவித்தார். மேலும், பணப்பையை தவறவிட்ட திருமங்கலத்தை சேர்ந்த சின்னச்சாமியையும் நேரில் அழைத்து பணப்பையை ஒப்படைத்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









