திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கட்ட காமன்பட்டியை சேர்ந்த குமரப்பா மகள் அனுசியா.இவர் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்துள்ளார். அவரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் சுரேஷ் என்பவரை பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சென்னையில் அனுசியா ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிருக்கும் போதும் காதலர் சுரேஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு அனுசுயாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர்களை விசாரனை செய்த பின்னர் ஒரு நாள் மட்டும் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் காவல் துறையினர்.
பெற்றோர்கள் வீட்டிற்கு கூட்டி சென்று தூக்க மாத்திரை கொடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். 2 மாதமாக அடைத்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய அனுசியா காதலர் சுரேஷ்வுடன் மதுரை காவல்துறை ஆணையாளரை சந்தித்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.இது குறித்து அனுசியா கூறும் போது-நாங்கள் இருவரும் 10 வருடமாக காதலித்து வருகிறோம்.எனது கணவர் சுரேஷ் டிப்ளமோ வரை தான் படித்துள்ளார் என்பதால் எங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம்.
சென்னை ஐயப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் என்னை காணவில்லை என புகார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை ஐயப்பன்தாங்கல் காவல் ஆய்வாளர் எங்கள் இருவரையும் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கத்தையும் கொடுக்குமாறு கூறினார் நாங்கள் இருவரும் எங்கள் இருதரப்பு வாதத்தையும் கூறினோம் எனது அம்மா மற்றும் அப்பா இருவரும் காவல் ஆய்வாளரிடம் பேசி கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க காவல் ஆய்வாளர் ஒரு நாள் மட்டும் உனது அப்பா அம்மாவுடன் சென்று ஆறுதல் கூறிவிட்டு பின்பு கனவுடன் சென்றுவிடலாம் என கூறியதை ஏற்றுக் கொண்டு வேறு வழியின்றி நான் எனது பெற்றோர் ஒரு நாள் மட்டும் சென்று இருந்தேன் அப்போது எனது பெற்றோர் நான் வீட்டுக்கு சென்றவுடன் எனக்கு தூக்க மாத்திரை மற்றும் கொடுத்து தூங்க வைத்து செல்போனை எடுத்து வைத்து கொண்டு என்னை அடைத்து வைத்தனர்.
நான் மயக்கத்தில் இருக்கும்போது என்னை ஏதோ ஒரு இடத்தில் இருந்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று இரண்டு மாதங்களுக்கும் மேலாக என்னை அடைத்து வைத்திருந்தனர்.அவர்களிட்மிருந்து தப்பி .வந்துள்ளேன் அதனால் எனக்கும் எனது துண் க்ரும் பாதுகாப்பு வேண்டி வந்துள்ளோம் என்றார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









