உழவர் சந்தைகளில் பணிபுரியும் காவலர்கள், துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம்: நலச்சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கம் சார்பாக, தமிழகமெங்கும் 179 இடங்களில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் மூன்று காவலர்கள் ஒரு துப்புரவு பணியாளர்கள் வீதம் மாத ஊதியம் 5000 என்ற அடிப்படையில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், அவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தினக்கூலி அடிப்படையில் மாற்றி கொடுக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்வேளாண் இயக்குனர் நடராஜன் ஆகியோரிடம், மாநிலத் தலைவர் திராவிட மாரி மற்றும் ராஜபாண்டி கோரிக்கை மனு அளித்தனர்.வேளாண் துணை இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி உடனிருந்தனர்.செய்தியாளர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!