மதுபோதையில் பழுதான நின்று இருந்த வாகனத்தில் படுத்திருந்த வாலிபர் பலி.

மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள வேல்முருகன் பஞ்சர் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது கடை முன்பாக நான்கு வருடங்களுக்கு முன் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்ட டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று உள்ளது கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமக்காபட்டி சேர்ந்த ஐயர் பாபு வயது 40 திருமணமாகாதவர் இவர் இவருக்கு வீடு எதுவும் கிடையாது மதுரையில் கிடைக்கும் வேலையை பார்த்து விட்டு ஹோட்டலில் ஹோட்டலில் சாப்பிட்டு வருவதாக தெரிய வருகிறது இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு பழுதான டாட்டா ஏஸ் வாகனத்தில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அதிக அளவு மது அருந்திய காரணத்தினால் உயிரிழந்து இருக்கலாம் எனவும் இவர் உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை துர்நாற்றம் வீசவே அருகில் உள்ளவர்கள் பழுதான வாகனத்தை சோதித்தபோது அழுகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போன சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மூன்று நாட்களாக ஒருவர் பழுதான வாகனத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!