மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வசதியின்றி அவதி.

உலக பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வசதியின்றி அவதி – சாமி தரிசனம் செய்த மனநிறைவு இன்றி இருப்பதாகவும் வேதனை;உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் வெளிநாடுகளிலிருந்தும், வட மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மிகவும் பழமையும் சிறப்பும் மிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு கோவிலில் உள்ள அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், சித்திரை வீதிகளில் கழிப்பறை வசதி உள்ள அனைத்தும் பல மாதங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தொடர்ந்து சித்திரை வீதிகளில் உள்ள கழிப்பறைகளை கோவில் நிர்வாகமே பராமரித்து பக்தர்கள் இலவசமாக பயன்படுத்துவதாக கூறப்படும் நிலையில் ஆண்களுக்கு கழிப்பிடம் இல்லாமல், பெண்களுக்கு மட்டும் கீழ சித்திரை வீதியில் மட்டும் செயல்ப்பட்டு வருவதாகவும்,சுகாதாரமற்ற முறையில் முறையாக பராமரிப்பின்றி காணப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சித்திரை வீதியின் சுற்றளவு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் வயதானவர்கள் சர்க்கரை மற்றும் இதய கோளாறுகள் கொண்ட பக்தர்கள் கழிப்பிடம் இன்றி அவதிப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!