சோழவந்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு .

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெறக்கூடிய திட்டப்பணிகள் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் மற்றும் பேரூராட்சித் தேர்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி ஆகியோர் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர் எம்எஸ் காலனியில் பூங்கா அமைப்பதற்கு 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் அங்கு மரக்கன்றுகளை நட்டனர் இதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்துவீடுதோறும் வாங்கும் திட்டங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார் பின்பு பேரூராட்சி மூலதன மானிய திட்டத்தின் கட்டப்பட்ட புதிய தினசரி சந்தையை பார்வையிட்டார் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள வள மீட்பு பூங்காவை பார்வையிட்டு மண்புழு உரம் மற்றும் கலவை உரம் தயாரிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார் தொடர்ந்துபுதிதாகக் கட்டப்பட்ட வரும் பஸ் நிலையத்தை பார்வையிட்டார் ஆய்வு முடித்து பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஆய்வு செய்து வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை கேட்டறிந்தார் இந்த ஆய்வில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன் செயற்பொறியாளர் சாய்குமார் உதவி செயற்பொறியாளர் சுரேஷ் ராஜன் செயல் அலுவலர் ஜீலான்பானு மற்றும் இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!