மதுரையில் அமைச்சர் தொகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாகஉ ள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.

மதுரை புறவழி சாலையில் இருந்து நகரின் மைய பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக எல்லீஸ் நகர் 70 அடி சாலை உள்ளது. தற்போது இந்த சாலையானது கடும் சேதமடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதேபோல் மதுரையில் உள்ள வக்கீல் புதுதெரு, தானப்பமுதலி தெரு, குட்செட் வீதி, வடக்கு வெளி வீதி, தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.குறிப்பாக கடந்த பொது தேர்தலில் போது சேதமடைந்த சாலையில் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு இருந்ததில் தற்போது கடும் வெயில் மற்றும் மழையின் காரணமாக தன்மை மாறி ஜல்லி கற்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடப்பதால் அவ்வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தை சந்தித்து வருகிறது.மேலும் 70 அடி சாலையின் நடுவே உள்ள குழிகளில் வாகனங்கள் வேகமாக அவற்றில் விழுந்து செல்வதால் கடும் சேதத்தை சந்தித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக பாதாள சாக்கடை மூடிகளும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் மழை காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுகின்றனர்.குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக்கட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றோம். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் சாலை முழுவதும் தேங்கி இருப்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வரும் இந்த சாலையை கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தீர்வு காண இயலவில்லை.தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் அவர், எனவே தனது தொகுதி மக்களின் நலன் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி இந்த பகுதியில் உள்ள சாலைகளை அகற்றி புதிதாக தரமான சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை விடுத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!