4 தலைமுறையாக வசித்துவரும் டொம்பன் இன மக்களின் வீடுகளை காலி செய்ய கூறி ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டல்-மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டை அருகேயுள்ள பாண்டியன் நகர் கிராமத்தில், டொம்பன் இனத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 80ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருகின்றனர்.இந்நிலையில், அக்கிராமத்தின் ஊராட்சிமன்ற தலைவர் செல்வராஜ் என்பவர் பாண்டியன் நகர் பகுதியிலயே தனக்கு சொந்தமாக பல ஏக்கர் இடம் வாங்கியதாக கூறப்படுகிறது.அந்த பகுதியில், வீட்டுமனைகளை கட்டி விற்பனை செய்யும் நோக்கத்தோடு அதே பகுதியில் வசிக்கும் டொம்பன் இன மக்களின் வீடுகளை காலி செய்ய கூறி ஊராட்சிமன்ற தலைவர் மிரட்டல் விடுப்பதாக கூறி பாண்டியன் நகர் கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.80ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் வசித்துவரும் நிலையிலும், அரசிடம் பல்வேறு முறை பட்டா வழங்க கூறி கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி மிரட்டுவதாக கூறும் கிராம மக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட நிலையில் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே, தற்போதயை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கை அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அவல நீடிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!