உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட 3 ஆகிய பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி அதை வேறுஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.மேலும்., உள்ளூர் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் பொழுது சுங்கக் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என இப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் மறுத்து வருவதோடு., தொடர்ந்து., அவ்வப்போது பகுதி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு., போராட்டம் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.இதனால்., கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது., அந்த கூட்டத்தில் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த அவசியம் இல்லை என தற்காலிகமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது மீண்டும் திருமங்கலம், கள்ளிக்குடி, T.கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த சொல்லி வலியுறுத்தியதால் 4 நாட்களுக்கு முன் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்கதையாக உள்ள சுங்கச்சாவடி கட்டணத்திற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என கோரி சுங்கச்சாவடியை முன்பு திருமங்கலம், கள்ளிக்குடி, T.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சுங்கச் சாவடியில் உள்ள அனைத்து வாகனங்கள் செல்லும் பாதையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுங்கச்சாவடி வழியாக கன்னியாகுமரி, தென்காசி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், கேரளா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட நெடிய வரிசையில் காத்திருக்கின்றனர்., அவசர ஊர்திகளும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பான சூழல் நிலவியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!