சுய மதிப்பீட்டு திட்டம்பொதுமக்கள் புதிய சொத்து வரி விதிப்பு நிர்ணயம் செய்து கொள்ளலாம் , ஆணையாளர் தகவல்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் 1 முதல் 100 வார்டு வரை உள்ள வார்டுகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்துவரி விதிப்பு நிர்ணயம் செய்ய ஒருமுறை சுய மதிப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் தங்களது கட்டிடத்திற்கு வரி விதிக்கப்படாத கட்டிடங்களுக்கு கட்டிடத்தின் மொத்த அளவு மற்றும் வரைபட அனுமதி அளவைவிட கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் அளவு ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்யப்பட்டு நேரடியாகவோ அல்லது தொடர்புடைய மண்டல அலுவலங்களில் எதிர்வரும் 15.11.2021 முதல் 30.11.2021 வரை மனு செய்து புதிய சொத்துவரி வரிவிதிப்பு செய்து கொள்ளலாம்.பொதுமக்கள் மனுக்களில் கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் 1) கிரைய பத்திர நகல், வாரிசு சான்று மற்றும் பட்டா, 2) கட்டிட வரைபட அனுமதி உத்தரவு நகல் 3)காலிமனை வரி ரசீது நகல், 4) கட்டிடத்தின் புகைப்படம், 5) ரூ.100 க்கான உறுதிமொழி பத்திரம் 6) மனுதாரரின் ஆதார் ஃ வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.இத்திட்டத்தில் மூலம் வரிவிதிப்பு செய்யாத கட்டிடங்கள் பின்னர், கண்டறிப்பட்டால் மாநகராட்சி விதிகளின்படி அபராதம் விதிப்பதுடன் மாநகராட்சி விதிகளின்படி முன் தேதியிட்டு வரிவிதிக்கப்படும் என, ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!