பலத்த மழை காரணமாக பழமையான மரம் வேரோடு சாய்ந்து விபத்து.

மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது இந்த நிலையில் இன்று காலை 11 அளவில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு எதிரே உள்ள சாலையில் மிகவும் பழமையான மரம் ஒன்று இன்று ரோடு சாய்ந்தது அப்பொழுது காளவாசல் பகுதியில் இருந்து சிம்மக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது இதை மதுரை மாடக்குளம் மேல தெருவை சேர்ந்த வைரமுத்து வயது 35 என்பவர் ஓட்டி வந்துள்ளார் கூட்டி வந்த ஆட்டோ மீது மரம் வேரோடு சாய்ந்து மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனமும் இடிபாடுகளில் சிக்கி எது அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆட்டோவில் இருந்த வைரமுத்துவை பத்திரமாக மீட்டனர் முப்பது வினாடிக்கு முன்புதான் அரசு பேருந்து ஒன்று அதை கடந்துள்ளது நல்வாய்ப்பாக அரசு பேருந்து மீது மரம் விழுந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் சிக்கி இருந்த மரக் கிளைகளை அகற்றி சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மரக்கிளைகள் அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது ஆயிரக்கணக்கில் போக்குவரத்து வாகனங்கள் சென்று வரும் பகுதியில் மிகப்பெரிய ராட்சத மரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!