போதையில் பேருந்தின் மீது நடந்து வந்து ரகளை செய்த நபர்; காவல்நிலையத்திற்கு இழுத்து சென்ற காவலர் .

தமிழகத்தில் கடந்த நவ.,4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையின் போது அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.இதில் சில மதுபிரியர்கள் பலரும் தங்களின் பங்குங்கு மதுபோதையில் பல்வேறு பகுதிகளில் ராகளைகளில் ஈடுபட்டவைகள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதேபோன்ற ஒரு சம்பவம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது ஏறிய மர்ம ஆசாமி ஒருவர், திரைப்படத்தில் வரும் காட்சியை போன்று பிடிமானத்திற்கு எதுவும் இன்றி தனியாக பேருந்தின் மீது நடந்து வந்து பின்னர் ஓட்டுநர் பிரேக் பிடித்ததும் நிற்க முடியாமல் கீழ் விழுந்துள்ளார்.இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அந்த போதை ஆசாமியின் பொடனியில் தட்டுதட்டி காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லும் வீடியோவை அந்த பகுதியில் இருந்த நபர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார்.இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதையடுத்து இது தற்போது வைரலாகி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!