மதுரை சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடை மாடியில் இருந்து தவறி விழுந்து 7வயது சிறுவன் படுகாயம்.

மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடையை மனைவி மற்றும் அவர்களது 7வயது மகன் நித்திஸ் தீனா ஆகியோர் இன்று காலை மதுரை அழகப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி பண்டிகைக்காக துணி எடுத்துள்ளனர்.இதனையடுத்து துணிகளை வாங்கிவிட்டு 5வது மாடியில் இருந்து எஸ்கிலேட்டர் வழியாக இறங்க முயன்றபோது எஸ்கிலேட்டர் அருகில் இருந்த இடைவெளியின் திடிரென சிறுவன் சென்றதால் தவறி விழுந்து 5வது மாடியிலிருந்து இருந்த கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை கீழே விழுந்தார்.அடுத்தடுத்து மாடிகளில் உள்ள கல்தூண்கள் சிறுவனின் தலையில் இடித்ததில் தலை உடைந்து அதிகளவிற்கு ரத்தம் வெளியேறிய நிலையில் சிறுவன் மயக்க நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.கடையில் இருந்த எஸ்கிலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாத நிலையில் குழந்தை தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அவசர அவரசரமாக சம்பவம் நடைபெற்றதற்கான ரத்த அடையாளங்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அழித்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் விபத்து குறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது ஊழியர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் காவல்துறையினரை திசை திருப்பியதோடு , இரத்தம் வடிந்த தடயத்தை காவல்துறையினரின் கண் முன்பாகவே தண்ணீர் ஊற்றி அழித்த அவல நிலையும் ஏற்பட்டது.கடையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முதலுதவிக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கடை நிர்வாகமோ எந்தவித பதட்டமும் இன்றி தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை வியாபாரத்திற்காக அனுமதித்தது அனைத்து தரப்பினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!