இராஜபாளையத்தில் மழையின் காரணமாக சாலைகளில் சகதியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளன இருப்பினும் .இராஜபாளையம் ஆலங்குளம் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது குறிப்பாக இராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி சகதிகல் அதிகம் தேங்கி உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் நடந்து செல்பவர்கள் கூட சகதியில் வழுக்கிக் கீழே விழுந்து காயம் ஏற்படும் அவல நிலை உள்ளது உடனடியாக இந்த பாதையை சரி செய்து சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களுடைய கோரிக்கையாக உள்ளது .நகராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட நிர்வாகமும் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களிடையே வேண்டுகோள்…

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!