பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

மதுரை பெரியார் பேருந்து நிலையம் எல்லீஸ் நகர் மேம்பாலம் நேற்று மாலை ஒரு இளைஞர் நாடு பாலத்தில் நின்று குதிக்கப் போவதாக சத்தம் போட்டுள்ளார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு அவரைக் கீழே இறங்கச் சொல்லி கேட்டுள்ளனர் .எனினும் அவன் கீழே இறங்க மறுக்கவே மேலே ஒருவர் சென்று எதுனாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் கீழே இறங்கி எனவும் சொல்லி பார்த்துள்ளார் .எனினும் அவர் இறங்க மறுக்கவே மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அவரிடம் சாதுர்யமாகப் பேசி கீழே இறக்கினர் .பின் அவரை விசாரித்தபோது மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த லெனின் குமார்  20 இவருக்கும் ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் மூன்று நாட்களுக்கு முன் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது குழந்தையை பார்க்க வைத்தியநாதபுரம் உள்ள பெண் வீட்டார் பார்க்க அனுமதிக்காத காரணத்தினால் இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து லெனின்குமார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனமும் மற்றும் பொதுமக்கள் அதிக அளவு செல்லக்கூடிய பகுதியில் ஒருவர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!