மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு மருத்துவ குழுவினர் ஆய்வு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் பார்வதி என்கின்ற பெண் யானைக்கு இடது கண்ணில் கடந்த சில ஆண்டுகளாக வெண்புரை காரணமாக பார்வை கோளாறு ஏற்பட்டு வந்த நிலையில்,அதனை சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு யானையை பார்வையிட்டு பார்வை கோளாறு சரி செய்வதற்க்கான உரிய சிகிச்சை அளிக்குமாறு கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தியிருந்தார்.தொடர்ந்து யானைக்கு வாரம்தோறும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவக்குழுவினர் யானையின் இரண்டு கண்களிலும் சிறப்பு கண்சிகிச்சை உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சைகளை மேற்கொண்டனர்.இந்த நிலையில் யானை பார்வதியின் இடது கண்ணில் ஏற்பட்ட வெண்புரையானது வலது கண்ணுக்கு பரவத் தொடங்கி உள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர்.தொடர்ந்து யானைக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி காலை, மாலை என இரு வேளைகளும் சொட்டு மருந்து அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!