பத்ரகாளி முத்துமாரியம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கொல்லர் பட்டறையில் அமைந்துள்ள பல ஆண்டுகள் பழமையான அருள்மிகு எட்டுபட்டறை பத்ரகாளி முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத திருவிழா வருடந்தோறு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு 24ம் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு அக்னிவிளக்கு வழிபாடு, மாவிளக்கு வழிபாடு,சாமி புறப்பாடு,பூச்சொரிதல், தீச்சட்டி எடுத்து முத்துமாரி அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு நேர்த்தி செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று அருள்மிகு ஸ்ரீபத்ரகாளி முத்துமாரியம்மனை தரிசித்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீரத நோய் வீடுகட்டுதல் திருமண தடை கர்மவினை நீங்க அம்மனை வேண்டி பக்தர்கள் 1மாத காலமாக விரதம் இருந்து காப்பு கட்டி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர். இக்கோவிலில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முத்துமாரி அம்மனை வழிபாடு செய்து பிரசாதங்கள் பெற்று பய பக்தியுடன் அம்மனை வணங்கி வழிபட்டு சென்றனர்.இக்கொவில் திருவிழாவை திருமங்கலம் j.d. விஜயன் முன்நின்று இக்கோவிலுக்கு தலைமையாக திருமங்கலம் அதிமுக முன்னாள் அமைச்சர் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். பி. உதயகுமார் அவர்களும் பங்கேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!