கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டுபிடித்துள்ளோம். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டிற்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர்.

திண்டுக்கல் செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வு பணி நியமனம் குறித்த கேள்விக்கு:கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நேர்முகத் தேர்வு பணி நியமனம் செய்யப்படவில்லை. அடுத்த மாதம் மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.நகைக்கடன் ஓராண்டு முடிந்து மறு அடகு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:பயிர்க்கடன் இல் ஏற்கனவே 2393 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது அதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் சொல்லியுள்ளோம். அதேபோல நகைக் கடையிலும் நிறைய முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. 6,000 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார் அதன்படி தகுதி உள்ளவர்களை ஆய்வு செய்து வழங்கப்படும். திருமங்கலத்தை அடுத்த பாப்பையா புறத்தில் மூக்கையா என்பவர் பல முறை நகை கடன் வாங்கியுள்ளார். இதுபோன்று நகை கடனில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்து உரிய ஏழை எளியவர்களுக்கு 5 பவுன் வைத்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக தள்ளுபடி கிடைக்கும்.முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் தற்போது இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சருக்கு ஒன்றும் தெரியாது என கூறியது குறித்த கேள்விக்கு:தெரிந்ததனால்தான் இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்து தவறுகளை கண்டுபிடித்துள்ளோம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை எதற்கும் திமுக தயாராக உள்ளது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!