திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருச்சி எம்பவர் டிரஸ்ட், விவேகானந்தா கல்லூரியின் தாவரவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. விவேகானந்த கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். தாவரவியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.திருச்சி எம்பவர் டிரஸ்ட் நிறுவனர் கனிமொழி மற்றும் மகேந்திரா நிதி நிறுவனத்தின் மதுரை கோட்ட மேலாளர் கணபதி, கல்லூரி துணை முதல்வர் பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றினார்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சந்திரசேகரன் செல்லபாண்டியன் மற்றும் குமரேசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.பிற துறை மாணவர்கள் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தாவரவியல் துறை பேராசிரியர் சவுந்தர்ராஜ் நன்றி உரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில், 250 மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!