தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்ட சத்து உணவு மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியன் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக நலத்துறை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்க லட்சுமி தலைமையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பற்றிய விழிப்புணர்வு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் நாம் உண்ணும் உணவும் குறித்தும் காய்கறி பழங்கள் மற்றும் பயிறு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் யோகா பயிற்றுனர் கற்பகாம்பாள் உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.நிகழ்ச்சியில் நகராட்சி மகப்பேறு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜனனி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கருப்பையா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் அழகு லட்சுமி, வட்டார திட்ட உதவியாளர் சிவரஞ்சனி மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் (பள்ளிமாணவிகள் ) வளர் இளம் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் ஊட்டச் சத்து மிக்க உணவு பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!