திருப்பரங்குன்றம் காவல் நிலைய தலைமை காவலர்கள் செல்வம் கரிகாலன் ஆகிய இருவரும் விளாச்சேரி கருப்பு கோவில் அருகில் வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் காவலர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை செய்ததில் மதுரை மீனாம்பாள்புரம், சத்யாநகரைச் சேர்ந்த அருண்குமார் 30 என்பது தெரியவந்தது. மேற்படி நபரை சோதனை செய்தபோது
அபாயகரமான வாள் ஒன்றினை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் மதனகலா அருண்குமாரை விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாகவும் பழிக்குப்பழிவாங்கும் எண்ணத்தில் ஒரு நபரை கொலை செய்வதற்காக இரண்டு அடி நீளமுள்ள வாளை வைத்திருந்ததாகவும் விசாரணையின் முடிவில் தெரியவந்தது. எனவே காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு வாள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். மேலும் கொலைக்குற்றம் நடைபெறும் முன்னரே அவற்றை முன்கூட்டியே தடுத்து நிறுத்திய காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளரை மதுரை மாநகர காவல் ஆணையர்.டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









