சிவகங்கை அருகே நின்ற கார் மீது லாரி மோதி விபத்துகாரை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் இந்திரா ஆதப்பன். இவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு தனியாக தனது காரில் வந்துவிட்டு ஊர் திரும்பியுள்ளார்.கார் நாட்டரசன் கோட்டை விலக்கு பிரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறியுள்ளது. அப்போது,திருப்பத்தூரிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு மானாமதுரை நோக்கி டிப்பர் லாரி வந்துள்ளது. லாரியை கவனிக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் ஏறியதால் பதட்டத்தில் கார் ஆப் ஆகியதாக கூறப்படுகிறது.சாலையின் நடுவே நின்று காரை பார்த்து பதட்டமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை உடனடியாக நிறுத்த முயன்றார். ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்ததில் காரை ஓட்டி வந்த இந்திரா ஆதப்பன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மதகுபட்டி காவல் நிலையத்தினர் சம்பவம் இடம் வந்து ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு, காரையும் ,லாரியையும் அப்புறப்படுத்தி காருக்கு அடியில் சிக்கியிருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!