பழைய செல்லாத நோட்டுகளை கேரளா மாந்திரீகம் மூலம் மாற்றி தருவதாக கூறி கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.69 லட்சம் பணம் பறிமுதல்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது.இதன் பிறகு தற்போது ரூ.500, ரூ.2000, ரூ.100, ரூ.200 புழக்கத்தில் உள்ளது.பலர் பழைய 500 , 1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டனர்.அதன் பிறகு பழைய ரூ.500, 1000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை.நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சதுரங்கவேட்டை சினிமா பாணியில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் கொடுத்தால் புதிய ரூ.500 நோட்டுகள் வழங்கப்படும் எனவும் மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் பல நபர்களை ஆசைவார்த்தை கூறி வரவழைத்து பணத்தை பறித்துவிட்டு தப்பி செல்வது தொடர்கதையாக உள்ளது.இந்த நிலையில் ரூ.10 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் கொடுத்தால்புதிய ரூபாய் நோட்டுகள் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கும் கும்பல் மதுரையில் பெருகி விட்டதாக கூறப்படுகிறது.கேரளா மாந்தீரிகம் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி தருவதாக ஒரு கும்பல் பலரை நம்பவைத்து பணம் பறித்து வந்துள்ளது.குறிப்பாக மதுரையில்தான் இந்த மோசடி அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரு கார்களில் வந்த டிப்டாப் ஆசாமிகள் வங்கிக்கு பணம் செலுத்தப் போவதாக கூறியுள்ளது.போலீசார் அந்த இரு கார்களையும் சோதனை செய்தபோது செல்லாத ரூ.1000 பழைய நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து கார்களில் வந்த 8 நபரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.6939500 பழைய 1000 ரூபாய் கட்டுகட்டாக பணத்தை பறிமுதல் செய்து காவேரி, கருப்பன், உதயகுமார், அரவிந்தகுமார், சிவன், விஜயகுமார், முத்துமோகன், ராம்குமார் ஆகிய 8 பேரை கைது செய்து இருகார்களையும் பறிமுதல் செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீசாரின் விசாரணையில் கேரளா சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றபோது போலீசாரிடம் பிடிபட்டது விசாரணையில் தெரிய வந்தது.மோசடியாக அழைக்கும் கும்பல்களை நம்பி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கேரளா செல்ல இருந்த நபர்கள் மதுரையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!