வ உ சி 150-வது பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம்.

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஏழை எளிய மக்களின் சட்டப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகன் கொத்தடிமை க்கு எதிராக களம் கண்டு தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு தமிழ் நூல்களை எழுதி பாரதியார்,முகைதீன் பிள்ளை ஆகியோரின் பாசத்திற்குரிய தேசிய விடுதலைப் போராட்ட வீரர் வ.உசிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மேலும் ,தமிழக அரசு அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அறிவித்துள்ளது.அதனைத் தொடர்ந்து ,இன்று அவரது 150வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக் குட்பட்ட சிந்தாமணி, சின்ன அனுப்பானடியில், அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பாக தலைவர் ராமசுப்பிரமணியன் மற்றும் மாரியப்பன் தலைமையில் வ. உ. சிதம்பரனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, 1000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக ஊர்வலம் சென்றனர்.இந் நிகழ்ச்சியில், செயலாளர் ரவி பொருளாளர் லோகநாதன் திரவியம் மற்றும் அருணாச்சலம் ஆறுமுகம் மகாலிங்கம் பரமசிவம் உள்ளிட்ட அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். …இதேபோன்று …வ உ சி 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா முன்னிலையில் மதுரை மாவட்டம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சிவமுருகன் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் ஐடி பிரிவு பிரபு இளைஞரணி முத்துக்குமார் உட்பட கலந்துகொண்டு வ உ சியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!