மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவுக்கு உட்பட்ட கீழ மாத்தூர் கிராமத்திலுள்ள புல்லூத்து பிரிவு அஷ்டலட்சுமி நகர் கீழமாத்தூர் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்காலை ஒரு சிலர் ஆக்கிரமித்து கம்பி வேலிகள் மற்றும் தகரம் கொண்டு அடைத்து வைத்திருந்தனர் இதுகுறித்து நமது கிழை நியூஸ் இணையதள செய்தி தளத்தில் நேற்று செய்தியாக வெளியிட்டு இருந்தோம் இதன் அடிப்படையில் அதிரடியாய் களமிறங்கிய மதுரை மேற்கு ஒன்றிய தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை முற்றிலுமாக அகற்றினர் மேலும் கண்மாயில் இருந்து விவசாய நிலத்திற்கு நீர் செல்லும் வகையில் வாய்க்காலை தூர் வார பொதுப்பணித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்துள்ளார் அதிரடியாக களம் இறங்கிய மேற்கு ஒன்றிய அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாக பாராட்டினர் மேலும் செய்தி வெளியீடு ஒரே நாளில் தீர்வு காண கீழை நியூஸ் இணையதள செய்தி தளத்திற்கும் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.