அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாகவே தென் மாவட்டங்களான, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர்,செங்கோட்டை , நாகர்கோவில், கண்ணியாகுமாரி, கேரளாவின் திருவணந்தபுரம், கொல்லம், குருவாயூர் ஆகிய ஊர்களுக்கும் அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து பழநி. சென்னை, பெங்களூரு, மும்பை, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் ரயில்கள் அனைத்தும் வந்து செல்கின்றன.
திருப்பரங்குன்றத்தில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களும், அனைத்து பாசஞ்சர் ரயில்களும் இங்கு நின்று செல்கிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரம் உள்ளது . ஆனால் ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்ல படிக்கட்டுகளுடன் கூடிய பாலம்
இல்லை. ( நடை மேடை இல்லை).இதனால் இரண்டாவது பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள் , முதல் பிளாட்பாரத்திற்கு வருவதற்கும், இரண்டாவது பிளாட்பாரத்தில் உள்ள ரயிலில் ஏறுவதற்கும் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள், கை குழந்தையுடன் செல்லும் தாய்மார்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் சில நேரம் தண்டவாளத்தை கடக்க முயலும் போதுஅடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிர் பலியும் ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பயணிகள் மட்டுமின்றி ரயில் நிலைய ஊழியர்களான கேங் மேன் உட்பட அனைவரும் ரயில் தண்டவாளத்தை கடந்தே செல்கின்றனர்.
மேலும் இந்த வழித்தடம் தற்போது இரட்டை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ரயில்வே சட்டப்படி தண்டவாளத்தை கடப்பது குற்றமாகும். ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பிளாட்பாரம் பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









