மதுரை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை…

செக்கானூரணியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர் மகேந்திரன்,முன்தினம் கம்ப்யூட்டரில் இவருக்கு வந்த இமெயிலை பார்க்க கிளிக் செய்தபோது கம்ப்யூட்டர் செயல்படாமல் ‘ஹேக்’ ஆனது.சிறிது நேரத்தில் கம்ப்யூட்டரில் இருந்த அனைத்து போட்டோ மற்றும் வீடியோ பைல்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ‘ரீட் மீ’ என்ற வாசகம் மட்டும் வந்தது ‌.அதைக் ‘கிளிக்’ செய்தபோது நாங்கள் உங்கள் கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்துள்ளோம். அனைத்து தகவல்களும் மீண்டும் வேண்டுமென்றால் 980 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 74 ஆயிரம்)வழங்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள்அந்த வைரஸில் குறிப்பிட்டுள்ள இமெயிலில் தொடர்பு கொண்டால் 50% தள்ளுபடி செய்து 490 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.37 ஆயிரம்) செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .பணத்தை செலுத்தாவிட்டால் தங்களுடைய அனைத்து தகவல்களையும் பயன்படுத்த முடியாது என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. இது குறித்து மதுரை மாவட்ட போலீசில் மகேந்திரன் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர். அதனால் நீங்கள் உங்களது கணினிகளில் பயன்படுத்தப்படும் Antivirus அப்ளிகேஷன்களை Update செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினிக்கு வரும் தேவையற்ற செய்திகள் (Mail) ஓபன் செய்யாதீர். தேவையற்ற பக்கங்ளுக்கு சென்று Download செய்யாதீர். மேலும் உங்களது கணினி தகவல்களை வேறொரு சேமிக்கும் கருவி ( Hard Disk ) மூலம் சேமித்து வைத்து (backup) கொள்ளுங்கள். கணினி பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!